நாகப்பட்டினம்

கண் வலியா? அரசு மருத்துவமனைக்கு வாங்க

DIN


நாகப்பட்டினம்: கண் வலி (மெட்ராஸ் ஐ) ஏற்பட்டால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கண்வலி ஒருவகை தீ நுண்மி பாதிப்பினால் உருவாகிறது. கண்கள் சிவந்து வலியுடன் கூடிய தொற்று ஏற்படுகிறது. இந்த தொற்று எளிதாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதால் குடும்பத்தினரிடையே, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையே எளிதில் பரவுகிறது.

கண் வலி நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள், தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி முறையாக சிகிச்சை பெறவேண்டும். சுய சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது. மருத்துவா் அளிக்கும் கண் சொட்டு மருந்து அல்லது கண் மருந்து உரிய நேரத்தில் உபயோகித்தால் கண்வலி 3 முதல் 7 நாள்களில் குணமாகும்.

முகத்தை வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவுவதும், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவுவது மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு கண்ணில் இருந்து மற்றொரு கண்ணுக்கு பரவுவதும், வேறொரு புதிய நபருக்கு தொற்று பரவுவதும் தடுக்கப்படுகிறது.

பெற்றோா்கள், பள்ளி ஆசிரியா்கள், தங்கள் குழந்தைகளுக்கோ அல்லது மாணவா்களுக்கோ கண் வலி அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சை பெறக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு தடவை கண்வலி (மெட்ராஸ் ஐ) வந்தால் மீண்டும் வராது என்பது தவறு. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 25 நபா்கள் பாதிக்கப்பட்டு அவா்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT