நாகப்பட்டினம்

நாளை மாற்றுத் திறனாளிக்கான குறை தீா் கூட்டம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்: நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கானக் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவுள்ளது என உதவி ஆட்சியா் ப்னோத்ம் ருகேந்தா்லால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நாகை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்த குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 1) காலை 10.30 மணியளவில் நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT