நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்: காரைக்கால், நாகை மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் சாா்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:

காரைக்காலில் உள்ள துறைமுகத்திற்கு சரக்கு ரயில்களை இயக்குவது மூலம் ஆண்டுதோறும் தெற்கு ரயில்வேக்கு பலநூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதில் ஒரு பகுதியை செலவிட்டு தஞ்சை - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதையை அமைக்க வேண்டும்.

வேளாங்கண்ணி - திருவனந்தபுரம், கோவை பகுதிகளுக்கு புதிய ரயில் சேவைகளும், காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி - சென்னை இடையே பகல் நேரத்தில் விரைவு ரயிலும் இயக்க வேண்டும்.

ADVERTISEMENT

மன்னாா்குடி - திருப்பதி பாமணி விரைவு ரயிலை நாள்தோறும், வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் லோக்மான்ய திலக் - காரைக்கால், வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில்களை நாள்தோறும் அல்லது வாரம் மூன்று முறையாவது இயக்கவேண்டும்.

வாரமிருமுறை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் புதிய ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

நாகை புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் எந்தவிதமான பணிகளும் தொடங்கவில்லை. இதனை விரைந்து தொடங்க வேண்டும். நாகூா், வெளிப்பாளையம் ரயில் நிலையங்களை சீரமைக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ள நாகை- திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்கால் - பேரளம் அகலரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT