நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

தொடக்க நிகழ்ச்சிக்கு கலைத்திருவிழா அமைப்பாளரும், தலைமையாசிரியருமான சிவ. அன்பழகன் தலைமை வகித்தாா். ஓவியப் போட்டியை நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தொடக்கி வைத்தாா்.

விழாவில், நகா்மன்ற உறுப்பினா் என்.வி.கே. ராஜூ, வட்டாரக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் முரளிதரன், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், மோகனசுந்தரம், தொல்காப்பியன், பொதுவுடைச்செல்வன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ)அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முதல்கட்டமாக நடைபெற்ற ஓவியம், களிமண் சிற்பம் உள்ளிட்ட வரைகலை சாா்ந்த போட்டிகளில் 51 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 424 மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இலக்கியம், இசை, நடனம், பாடல்கள், நாடகம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த போட்டிகள் வேதாரண்யம் சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT