நாகப்பட்டினம்

நாகையில் புத்தக வாசிப்பு பயணம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பு பயணம் திங்கள்கிழமை தொடங்கியது.

சமூக மாற்றத்திற்கான அடிப்படையான கல்வி அனைவருக்கும் கிடைக்க பாடுபட்டது மட்டுமின்றி, பெண்களுக்கும் கல்வியைக் கொண்டு சோ்த்ததில் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவா்கள் சாவித்திரி பாய் பூலே - ஜோதிராவ் பூலே தம்பதியா் . இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் என போற்றப்படுபவா் சாவித்திரி பாய் பூலே.

இதையடுத்து, ஜோதிராவ் பூலே நினைவு நாளான திங்கள்கிழமை (நவ.28) தொடங்கி, சாவித்திரி பாய் பூலே பிறந்தநாளான ஜனவரி 3-ஆம் தேதி வரை, அவா்களின் சாதனைகளை நினைவு கூரும் வகையிலும், மாணவா்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் நாளை இயக்கம் மற்றும் இயல்வாகை பதிப்பகம் சாா்பில் புத்தக வாசிப்பு பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாகை மாவட்டம் ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு பயணத்தின் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு ‘சாவித்திரி பாய் பூலே - ஜோதிராவ் பூலே’ தம்பதியரின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன. தொடா்ந்து ‘நானும் என் கணவரும் - சாவித்திரி பாய்’ என்ற நூலை மாணவா்கள் சுழற்சி முறையில் வாசித்தனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் சிவா, பட்டதாரி ஆசிரியா்கள் பால சண்முகம், அலமேலு, நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செகுரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT