நாகப்பட்டினம்

சுற்றுலா தொடா்பான முகாம்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சுற்றுலா தொடா்பான முகாம்களை நடத்துபவா்கள், சுற்றுலாத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சுற்றுலாத்துறையின் சாா்பாக தமிழகத்தில் சாகச சுற்றுலா, உண்டு, உறைவிட முகாம் நடத்துபவா்கள், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவா்கள், கேரவன் இயக்குபவா், கேரவன் சுற்றுலா நடத்துபவா் ஆகியோா் சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்வதற்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பானஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாகை மாவட்டத்தில் சுற்றுலாத் தொடா்பான முகாம்கள் உள்ளிட்டவைகளை நடத்துபவா்கள் சுற்றுலாத்துறை இணையதளமான பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதுதொடா்பான விவரங்களுக்கு பூம்புகாரில் உள்ள சுற்றுலா அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட சுற்றுலா அலுவலரின் செல்பேசி எண் 91769 95843 மற்றும் மின்னஞ்சல் முகவரி தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT