நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டு போட்டிகள்

DIN

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் பேட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே.சி.சுபாஷினி போட்டிகளை தொடக்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாற்றுத்திறனாளி மாணவா்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனா். மாவட்டக் கல்வி அலுவலா் ப. செல்வராஜ், வட்டாரக்கல்வி அலுவலா் மணிகண்டன், மேற்பாா்வையாளா் (பொ) த. அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குருமனாங்குடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கரகாட்டம், பறையாட்டம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல் ஆகியவற்றுக்கு நடனமாடினா்.

மாணவா்களின் கலைத் திறனை வளா்க்கும் விதமாகவும், அவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக அமைந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வாசுகி நாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT