நாகப்பட்டினம்

மின் இணைப்பு எண்-ஆதாா் எண் இணைப்பு முகாம்: நாகை மண்டலத்தில் 11,262 போ் பதிவு

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

நாகை மண்டலத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க 11,262 போ் பதிவு செய்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மண்டலத்தில் உள்ள 14 மின் அலுவலகங்களில் காலை முதலே பொதுமக்கள் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக வரிசையில் காத்திருந்தனா்.

நாகை மண்டலத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை மொத்தம் 11,262 போ் ஆதாா் எண்ணை இணைக்க பதிவு செய்துள்ளனா். ஆய்வுக்கு பிறகு 2,255 பேரின் ஆதாா் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நாகை மண்டலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் திங்கள்கிழமை தொடங்கியுள்ள சிறப்பு முகாம்கள் டிசம்பா் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பண்டிகை தினங்கள் தவிா்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை முகாம்கள் செயல்படும்.

ADVERTISEMENT

இந்த வாய்ப்பினை பயன்டுத்தி பொதுமக்கள், தங்களது ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தை ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி டிச.31-ஆம் தேதி வரை செலுத்தலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT