நாகப்பட்டினம்

ஐசக் நியூட்டன் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்பு முதலாமாண்டு தொடக்க விழா

29th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

சா் ஐசக் நியூட்டன் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் படிப்பின் முதலாமாண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் த.ஆனந்த் பேசியது: கரோனா தீநுண்மி பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் சுகாதார ஆய்வாளா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கரோனா தடுப்புப் பணிகளில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சுகாதார ஆய்வாளா்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினா். அவா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

கல்லூரி முதல்வா் மா.திருநாவுக்கரசு, உதவிப் பேராசிரியா் ரம்ஜான் கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT