கீழ்வேளூா் ஒன்றியத்தில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை (நவ.30) முதல் கலைத் திருவிழா நடைபெறுகிறது.
கீழ்வேளூா் ஒன்றியத்திலுள்ள தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கும், கீழ்வேளூா் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் நவம்பா் 30 மற்றும் டிசம்பா் 1 ஆம் தேதிகளில் கலைத் திருவிழா நடைபெறுகிறது.
குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, டிசம்பா் 2 மற்றும் 5-ஆம் தேதிகளில் கலைத் திருவிழா நடைபெறுகிறது.