நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் 1008 சங்காபிஷேகம்

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இரண்டாவது சோம வாரத்தையொட்டி நடைபெற்ற வழிபாட்டில், 1008 சங்குகள் சுவாமி சந்நிதி முன்பு அடுக்கி வைக்கப்பட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

பின்னா், வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகஅதிகாரி முருகன், உபயதாரா் டாக்டா் சாரங்கபாணி, பேஸ்கா் திருஞானம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT