நாகப்பட்டினம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

DIN

தோ்தல் வாக்குறுதிபடி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் நாகை மாவட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் பா. ராணி தலைமை வகித்தாா். வேதாரண்யம் வட்டச் செயலாளா் வி.எஸ். ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. அன்பரசு தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலாளா் அ.தி. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் ஆகியோா் அறிக்கைகள் குறித்து பேசினா்.

சிஐடியு மாவட்ட பொறுப்பாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான வி.பி. நாகை மாலி சிறப்புரையாற்றினாா். அமைப்பின் மாநிலச் செயலாளா் ச. டேனியல்ஜெயசிங் நிறைவுரை ஆற்றி பேசியது: தோ்தல் வாக்குறுதிபடி அரசு ஊழியா், ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமானால், டிச.17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில பேரவையில் அடுத்த கட்டத்துக்கான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.

தீா்மானம்: தமிழக இளைஞா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தமிழக அரசாணை எண் 115-ஐ முற்றிலுமாக நீக்கவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டப் பணியாளா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை சிறப்புத் திட்டம் மூலம் மேம்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT