நாகப்பட்டினம்

மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி

28th Nov 2022 03:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற போட்டியை வாய்மேடு இலக்குவனாா் சதுரங்க பயிற்சி மையம் மற்றும் நாகை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தின. இதில், நாகை, திருவாரூா், தஞ்சை, தேனி, அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 9 முதல் 19 வயது வரையில் 10 பிரிவுகளின் அடிப்படையில் நடந்த போட்டியில் 436 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளை மக்களவை முன்னாள் உறுப்பினா், அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனா் பி.வி. ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உள்பட 230 வகையான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பள்ளிச் செயலாளா் மகேஸ்வரி விவேக்வெங்கட்ராமன், வேதநாயகி ஆகியோா் வழங்கினா். சதுரங்கக் கழகத்தின் மாநில தலைவா் விசயன், இணைச் செயலாளா்கள் பால குணசேகரன், மணிமொழி, பொருளாளா் அருண்குமாா், பள்ளி முதல்வா் டாக்டா் வெற்றிச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT