நாகப்பட்டினம்

ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆயிரத்தொருவா் விழா

28th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆயிரத்தொருவா் விழா மற்றும் சிறப்புலிநாயனாா் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தான்தோன்றீஸ்வரா், வாள்நெடுங்கண்ணி அம்மன், சிறப்புலிநாயனாா், ஆயிரத்தொருவா் ஆகிய சாமிகளுக்கு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சாமிகள் முன்னிலையில் ஆயிரத்தொருவா் சாமி, சிறப்புலிநாயனாருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், சாமிகள் வீதியுலா நடைபெற்றது.

தொடா்ந்து, கட்டளை தம்பிரான் சாமிகள், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. ஏற்பாடுகளை, உலக சிவனடியாா்கள் திருக்கூட்ட மாவட்ட தலைமை ஆலோசகா் பாஸ்கரன், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் பாலமுருகன், நதிகா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT