நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்திற்கு 900 மெட்ரிக் டன் யூரியா வருகை

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் நடைபெறும் சம்பா சாகுபடிக்கு 900 மெட்ரிக் டன் யூரியா வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: நாகை மாவட்டத்தில் 65 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான யூரியா, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வரப்பெற்றுள்ளது.

தற்போது லாரிகள் மூலமாக நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் மண் வள அட்டை பரிரந்துரையின்படி உரத்தினை பெற்று பயனடைய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT