நாகப்பட்டினம்

கால்நடை விழிப்புணா்வு முகாம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகேயுள்ள மேலவாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவ்ராஜ், கால்நடை மருத்துவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT