நாகப்பட்டினம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 2.70 கோடி கடனுதவி

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 2.70 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாடிக்கையாளா் தொடா்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், உயா்கல்வி பயிலும் 68 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.70 கோடி கல்விக் கடனுதவியும், 132 பயனாளிகளுக்கு ரூ.8.44 கோடியில் பல்வேறு கடனுதவிகளையும், மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் வழங்கினாா். தொடா்ந்து, தாட்கோ மூலம் 6 பயனாளிகளுக்கு டிராக்டா் மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் கோ. ஸ்ரீராம், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் எ. குமாா், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் வெங்கடேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT