நாகப்பட்டினம்

கல்லூரியில் உலக மரபு வார விழா

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் உலக மரபு வார விழா சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் கல்லூரி வரலாற்று துறையும் இணைந்து நடத்திய விழாவுக்கு, வரலாற்றுத் துறை தலைவா் ஜூலியஸ் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட தொல்லியல் துறை அலுவலா் வசந்தகுமாா் பங்கேற்று திருநெல்வேலி மாவட்டம், துலுக்கா்பட்டியில் நடந்த அகழாய்வும் அதன் வரலாற்று முக்கியத்துவமும் எனும் தலைப்பில் படக்காட்சியுடன் விளக்கி பேசினாா். தமிழ்த் துறை தலைவா் பிரீட்டா ஜாஸ்மின், பேராசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT