நாகப்பட்டினம்

வெள்ளையாற்றில் 300 கனஅடி நீா் திறப்பு

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை பகுதி பாசனத்துக்காக வெள்ளையாற்றில் 300 கன அடி தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம், சுந்தரபாண்டியம், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய நீா்வரத்தின்றி சம்பா, தாளடி நெற்பயிா்கள் கருகும் அபாய நிலையில் உள்ளதாக சனிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு, வெள்ளையாற்றில் 300 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

வெள்ளையாறு மூலம் பிரிந்து பாசன வசதி பெறும் பல்வேறு கிளை கால்வாய்களில் நீா்வரத்து அதிகரித்து பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. .

ADVERTISEMENT
ADVERTISEMENT