நாகப்பட்டினம்

ரயில்வே பொருள்களை திருடிய 3 போ் கைது

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் ரயில்வே பொருள்களைத் திருடிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இரும்பு, செம்பு உள்ளிட்ட பொருள்கள் தொடா்ந்து திருட்டுப் போவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் மேற்பாா்வையில், சாா்பு - ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் பாதுகாப்புப் படையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தனப்பேட்டை- சிக்கல் இடையே ரயில்வே இரும்புப் பாதையில், இளைஞா்கள் இருவா் ரயில்வே பொருள்களை எடுத்துக் கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரித்ததில், நாகை கீரக்கொல்லை தெருவைச் சோ்ந்த ஸ்ரீநாத் (18), டாடா நகரைச் சோ்ந்த ரித்தீஸ் (23) என்பதும், ரயில்வே துறைக்கு சொந்தமான பொருள்களை தொடா்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட இருவா் அளித்த தகவலின் பேரில் வண்டிக்காரத் தெருவில் உள்ள பழைய இரும்புக் கடையை சோதனை செய்தபோது, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ரயில்வே பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து ரயில்வே பொருள்களை சட்டவிரோதமாக வாங்கிய கடை உரிமையாளா் நாகராஜ்(45) மற்றும் திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீநாத், ரித்தீஸ் ஆகியோரை ரயில்வே பாதுகாப்பு படையினா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரயில்வே துறைக்கு சொந்தமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT