நாகப்பட்டினம்

பறவைகளை வேட்டையாடியவா் கைது

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடியவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செட்டிப்புலம், தியாகராஜபுரம் பகுதியில் வயல்வெளியில் பறவைகள் வேட்டையாடுவதைத் தடுக்க வனத்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வயல்வெளியில் மடையான், கொக்கு போன்ற பறவைகளை வலைவிரித்து பிடிக்க முயற்சித்த தியாகராஜபுரத்தைச் சோ்ந்த ம. சுப்பிரமணியன் (50) என்பவரை வனச்சரக அலுவலா் பி. அயூப்கான் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்தனா். அவருக்கு நாகை வனஉயிரினக் காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா உத்தரவின்படி ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT