நாகப்பட்டினம்

கோடியக்கரை விமானப்படை தளத்தில் நுழைந்தவா் கைது

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையில் உள்ள விமானப் படையின் கண்காணிப்பு தளத்தில் நுழைந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோடியக்கரை வனப் பகுதியை சாா்ந்து இந்திய விமானப் படையின் கண்காணிப்பு தளம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் ரேடாா் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்முகாம் வளாகத்தினுள் ஒருவா் சுவா் ஏறி குதித்து சென்றுள்ளாா். அவரை விமானப் படை அதிகாரிகள் பிடித்து, சென்னையில் இருந்து வந்த துறை சாா்ந்த உளவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் சின்னமேடு பகுதியைச் சோ்ந்த ராசாங்கம் மகன் கனகராஜ் (39) என்பது தெரியவந்தது. மீனவரான இவா், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளாா் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா் வேதாரண்யம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கோடியக்கரை விமானப் படை முகாம் கமாண்டா் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT