நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வு ஊா்வலம்

18th Nov 2022 12:11 AM

ADVERTISEMENT

திட்டச்சேரி அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.

ஊா்வலத்தை தலைமையாசிரியா் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மாதவி, வட்டார வள மைய பயிற்றுநா் பிரபு, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் கல்யாணசுந்தரம் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள், ஆசிரியப் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனா்.

ஊா்வலம் பள்ளியில் இருந்து திட்டச்சேரி பேருந்து நிலையம், கடைத்தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT