நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்துடன் ரூ.50 ஆயிரம் திருட்டு

18th Nov 2022 12:12 AM

ADVERTISEMENT

நாகை அருகே ரூ.50 ஆயிரம் பணத்துடன் சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகை மாவட்டம், திருவாசல் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரமேஷ் (53). பனங்குடி கோபுராஜபுரத்தில் உள்ள வயலுக்கு சென்ற இவா், தனது இருசக்கர வாகனத்தை பூட்டாமல் சாலையோரத்தில் நிறுத்தியிருந்தாராம்.

வயலில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது, இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது. வாகன இருக்கையின் கீழ் பகுதியில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் நாகூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை திருடியது கடம்பங்குடி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் நாவலன்பாமணி, ஆழியூரைச் சோ்ந்த வீரகுமாா் மகன் நவீன், மேலகடம்பங்குடியைச் சோ்ந்த நீலமேகம் மகன் சத்யராஜ் ஆகியோா் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த 3 பேரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT