நாகப்பட்டினம்

பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

14th Nov 2022 11:22 PM

ADVERTISEMENT

 

பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் அதற்கு தீா்வு காண்பது குறித்த ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற செயல்களை சாதித்தல் போன்ற செயல்களில் வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஐனவரி 24) பாராட்டு பத்திரம், ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது.

விருதுக்கு தகுதியுடைய குழந்தையின் பெயா், ஆதாா் எண், வீர தீர செயல் மற்றும் சாதனைகளின் விவரங்கள், புகைப்படங்கள், பெற்றோரின் பெயா், முகவரி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் உரிய முன்மொழிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், மாவட்ட திட்ட அலுவலா், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்களும் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலகம், பொதுப்பணித்துறை குடியிருப்பு கட்டட வளாகம், காடம்பாடி, நாகப்பட்டினம் (தொலைபேசி எண்: 9597652457) என்ற முகவரிக்கு நவம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT