நாகப்பட்டினம்

திமுக வாக்குச்சாவடி முகவா்களுடன் முதல்வா் கலந்துரையாடல்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்களுடன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை கலந்துரையாடினா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்தல், 18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் தொடா்பான வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்நிலையில், திமுக சாா்பில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவா்களுடன் காணொலி மூலம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தி வருகிறாா்.

அதன்படி, நாகை மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்களுடன் சனிக்கிழமை இரவு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினா். அப்போது 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு தேவையானவை குறித்து முகவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

நாகை மாவட்ட செயலரும், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், நகா்மன்ற தலைவா் மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், பொருளாளா் லோகநாதன், கவுன்சிலா்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT