நாகப்பட்டினம்

பொரவச்சேரியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

1st Nov 2022 04:59 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், பொரவச்சேரி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் 500 மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. கால்நடைகளை சிறப்பாக பராமரித்த உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மஞ்சக்கொல்லை

மஞ்சக்கொல்லை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிக்கல் கால்நடை உதவி மருத்துவா் லாரன்ஸ், கால்நடை மருத்துவா் பூபதி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினா் கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT