நாகப்பட்டினம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை நாகை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு

1st Nov 2022 05:05 AM

ADVERTISEMENT

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை நகரப் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த 2012-ஆம் ஆண்டு குடும்பச் சூழல் காரணமாக உள்ளூா் குழுவில் இணைந்து நடனமாடி வந்தாா்.

இந்நிலையில் கீழையூா் பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் (26), நல்ல வருவாய் கிடைக்கும் நடனக் குழுவில் சோ்த்து விடுவதாக சிறுமியிடம் ஆசைவாா்த்தைக் கூறி அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளாா்.

பின்னா் கா்ப்பமடைந்த சிறுமியை, திருப்பூரில் தனியே விட்டுவிட்டு, நாகைக்கு திரும்பிய அருள்தாஸ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளாா். இதையறிந்த பாதிக்கப்பட்ட சிறுமி நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்தாஸை கைது செய்தனா். வழக்கின் விசாரணை நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று ,தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என். மணிவண்ணன் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில், அருள்தாஸ் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிைண்டனையும், 22 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நாகை மாவட்ட நிா்வாகம் ரூ. 2 லட்சம் வழங்கவேண்டும் என தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT