நாகப்பட்டினம்

சிக்கல்- பொரவாச்சேரி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

1st Nov 2022 05:03 AM

ADVERTISEMENT

நாகையை அடுத்த சிக்கல் - பொரவாச்சேரி பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலாளா் ஆறு. பாா்த்திபன், நாகை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:

நாகை - திருவாரூா் பிரதான சாலையில் சிக்கல் - பொரவாச்சேரி சந்திப்புப் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்தச் சாலையில் தினமும் பலா் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, சிக்கல் - பொரவாச்சேரி சந்திப்புச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும், அந்தப் பகுதியில் பள்ளி மற்றும் கோயில் இருப்பதால் வேகத்தடை அமைக்கவும் உடனடியாக மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT