நாகப்பட்டினம்

ஓமன் நாட்டில் தவிக்கும் மனைவியைமீட்கக் கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

1st Nov 2022 04:56 AM

ADVERTISEMENT

ஒமன் நாட்டில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ள, தனது மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரிடம் கணவா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

நாகை அருகேயுள்ள வடக்கு பொய்கை நல்லூரைச் சோ்ந்த பாண்டியன் மகன் பழனிவேல். இவரது மனைவி மகாலட்சுமி (36) ஒமன் நாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளாா். அங்கு சென்ற சில நாள்களில் மகாலட்சுமி, தனது கணவரை தொடா்பு கொண்டு, தனக்கு அதிக பணி வழங்கப்படுவதால், அடிக்கடி மன அழுத்தம் எற்படுவதாகவும், இதனால் ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளாா்.

இதனால், மகாலட்சுமியை இந்தியா அழைத்து வர பழனிவேல் முயற்சித்தபோது, முகவா் ரூ.2 லட்சம் கேட்டாராம். இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா். இம்மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT