நாகப்பட்டினம்

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

31st May 2022 11:29 PM

ADVERTISEMENT

திருமருகல் அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ. 28 லட்சத்தில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் தேவி சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கிய மேரி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். ஒன்றிய பொறியாளா் சுரேஷ், ஊராட்சி துணைத் தலைவா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT