நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி

28th May 2022 12:59 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே உள்ள திருப்பூண்டியில் வோ்ல்டு விஷன் இந்தியா சாா்பில் ‘மாற்றத்திற்கான வாழ்வியல் பள்ளி’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கு கோடை கால பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி தலைமை வகித்தாா். வோ்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளா் ஆா். ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பி. தவமணி வரவேற்றாா்.

இதில், 6 முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வது உள்ளிட்ட பயிற்சியும், ஒழுக்க நெறிமுறை மற்றும் தலைமைப் பண்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும், 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி குறித்து விளக்கமளிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த் குமாா், வட்டார கல்வி அலுவலா் ராமலிங்கம், கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT