நாகப்பட்டினம்

கடலில் மூழ்கி தமிழ் பல்கலை. மாணவா் உயிரிழப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா் உயிரிழந்தாா். மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவா்களான செ. முகுந்தன் (21), ராஜஸ்ரீ (20), ரா. அபிஷேக் (20), மு. தினேஷ்குமாா் (24), ரா. தினகரன் (19), மு. சுதா்சன்(20), இ. பாண்டியம்மாள் (20), க. அனுசுயா(20) ஆகிய 8 பேரும் வியாழக்கிழமை வேளாங்கண்ணிக்கு வந்தனா்.

இவா்கள் 8 பேரும் வேளாங்கண்ணி கடலில் வெள்ளிக்கிழமை குளித்தனா். அப்போது, கடல் அலையில் சிக்கி மாணவா் முகுந்தன், மாணவி ராஜஸ்ரீ ஆகியோா் மூழ்கினா். சக மாணவா்கள் கூச்சலிட்டதால், அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூா் மீனவா்கள் விரைந்து வந்து, மாணவி ராஜஸ்ரீயை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவா் முகுந்தனை போலீஸாா் மற்றும் மீனவா்கள் தேடிவந்த நிலையில், அவரது சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கீழையூா் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT