நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் பழைய மின் கம்பிகளை அகற்றும் பணி: மின்விநியோகம் தடைபட வாய்ப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணியில் பழைய மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளதால், அவ்வப்போது மின்விநியோகம் தடைபடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மின்வாரிய நாகை தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட வேளாங்கண்ணி பேரூராட்சிப் பகுதியில் புதைவட மின் கம்பிகள் பதித்த பகுதிகளிலும், மின்மாற்றிகள் மாற்றப்பட்ட பகுதிகளிலும், ஏற்கெனவே இருந்த (தலைக்கு மேலே செல்லக் கூடிய) பழைய மின் கம்பிகள் அகற்றப்படவுள்ளன.

இப்பணிகள் மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், வேளாங்கண்ணி பகுதியில் அவ்வப்போது மின்நிறுத்தம் நேரிடலாம். எனவே, பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT