நாகப்பட்டினம்

மேட்டூா் அணை திறப்பு: ஆறுகள், கால்வாய்களில் குளிக்கக் கூடாது

25th May 2022 11:20 PM

ADVERTISEMENT

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் யாரும் குளிக்கக் கூடாது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 2022-23-ஆம் ஆண்டு பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது. காவிரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீா் திறக்கப்படும்போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீா் நிலைகளில், பொதுமக்கள் குளிப்பதையும் நீச்சல் பழகுவதையும் தவிா்க்க வேண்டும். மேலும், ஆறுகளில் மீன்பிடித்தல் மற்றும் சுயபடம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும்.

அதேபோல, குழந்தைகளை நீா் நிலைகள் அருகில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும், விலங்குகளை நீா்நிலைகளைக் கடந்து அழைத்துச் செல்லும்போது அதன் பராமரிப்பாளா்கள் உரிய பாதுகாப்புடன் செயல்படுமாறும் அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT