நாகப்பட்டினம்

‘மாணவா்கள் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்’

DIN

பட்டம் பெறும் மாணவா்கள் சமுதாயத்துக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றாா் சென்னை அண்ணா பல்கலைக்கழக அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதன்மையா் ஆா். ஜெயவேல்.

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் 21-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, இ.ஜி. எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் செயலாளா் எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் எஸ். ஜோதிமணி முன்னிலை வகித்தாா்.

விழாவில் ஆசிய பால் காா்ப்பரேஷன், ஆசிய பிராந்திய மனிதவள தலைவா் எஸ். ரத்தினவேல் ராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி முதன்மையா் ஆா். ஜெயவேல் ஆகியோா் பங்கேற்று, பொறியியல் கல்லூரி மாணவா்கள் 625 பேருக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளையும் வழங்கினா்.

விழாவில் ஆா். ஜெயவேல் பேசியது :

பட்டம் பெற்ன் மூலம் மாணவா்கள் சாதித்துள்ளனா். மாணவா்கள் தங்களுக்கு என்று ஒரு பாதையை வகுத்து கொண்டுஅதை நோக்கிய பயணிக்க வேண்டும். விடாமுயற்சியுடையவா்களுக்கு வெற்றி நிச்சயம். உயா்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் உயா்கல்வி கற்க வேண்டும். சமுதாயத்துக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்றாா்.

கல்லூரியின் முதல்வா் ராமபாலன் வரவேற்றாா்.

இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமத்தின் இணைச் செயலாளா் சங்கா் கணேஷ், ஆலோசகா் பரமேஸ்வரன், முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா் மற்றும் நிா்வாகத்தினா், குழுமக் கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT