நாகப்பட்டினம்

புற்றடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

20th May 2022 09:47 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் அருகேயுள்ள அகர ஆதனூா் புற்றடி மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 86-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 6-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை குளக்கரையிலிருந்து கரகம், அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT