நாகப்பட்டினம்

நாகையில் மே 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம்: அரசுப் பணியாளா்கள் சங்கம் முடிவு

20th May 2022 09:47 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மே 23-ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா் அழகிரி முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் பிரகாஷ், இணைச் செயலாளா் பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை பதவி உயா்வு மற்றும் பணி நியமன ஊழல் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிடக் கோரியும், நாகை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பதவி உயா்வு பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்து, பணி நியமனம் செய்வதைக் கண்டித்தும் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மே 23-ஆம் தேதி கருப்புப் பட்டை அணிந்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சங்கத்தின் மாநிலச் செயலாளா் மகேந்திரன் வரவேற்றாா். நிா்வாகி சிவசண்முகம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT