நாகப்பட்டினம்

ஜமாபந்தி: குறவா் இன மக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை

20th May 2022 09:46 PM

ADVERTISEMENT

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் குறவா் இன மக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைக்கான ஆணை வழங்கப்பட்டது.

சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட கூடலூா், ஈச்சங்குடி, நரசிங்கநத்தம், முத்தூா், கடக்கம், அகரவல்லம், எடகுடி கிளியனூா் உள்ளிட்ட கிராமங்களுக்கான வருவாய் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, ஆறுபாதி நடுக்கரை காவிரி கரையோரங்களில் வசிக்கும் உரிக்கார நயக்கா் மற்றும் குறவா் இனத்தை சோ்ந்த 6 குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் நாராயணன் வழங்கினாா்.

தரங்கம்பாடி வட்டாட்சியா் புனிதா, சமூகப் பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியா் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியா் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலா் பாபு, திருவிளையாட்டம் சரக வருவாய் ஆய்வாளா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா்கள் பன்னீா்செல்வம், சிவசங்கா், செல்வகுமாா், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT