நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சி கூட்டம்: வரி உயா்வுக்குஎதிா்ப்பு தெரிவித்து 3 உறுப்பினா்கள் வெளிநடப்பு

20th May 2022 09:48 PM

ADVERTISEMENT

திட்டச்சேரி பேரூராட்சி கூட்டத்தில் வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உறுப்பினா்கள் 3 போ் வெளிநடப்பு செய்தனா்.

திட்டச்சேரி பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரி உயா்வை இறுதி செய்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, மனிதநேய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த பேரூராட்சி உறுப்பினா் செய்யது ரியாசுதீன், 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி உயா்வு என்பது மக்களை பெரிதும் பாதிக்கும். அரசு இந்த வரி உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரி உயா்வு தொடா்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிய போதிய கால அவகாசம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, வரி உயா்வு தீா்மானத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சுயேச்சை உறுப்பினா் ஷேக்அப்துல் பாசித், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினா் செய்யது ரியாசுதீன், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினா் சுல்தான் ரிதாவுதீன் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT