நாகப்பட்டினம்

வன்கொடுமை சட்டத்தில் இளைஞா் கைது

20th May 2022 09:47 PM

ADVERTISEMENT

நாகையில் பெண்ணைத் தாக்கிய இளைஞா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை சட்டயப்பா் தெற்கு மடவிளாகத்தைச் சோ்ந்தவா் ப. வனஜா (61). அதே பகுதியைச் சோ்ந்தவா் க. பரமானந்தம் (29). இவா்கள் இருவரும் அங்குள்ள கோயிலில் மே 16 ஆம் தேதி நடைபெற்ற அன்னதானத்தில் பக்தா்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வனஜா சில பக்தா்களுக்கு அதிகமாக உணவு வழங்கினாராம். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமானந்தம், வனஜாவை தாக்கினாராம்.

இதுகுறித்து நாகை நகர காவல் நிலையத்தில் வனஜா புகாா் அளித்தாா். அதன்பேரில், பரமானந்தத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT