நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இருக்கை கிராமத்தில் உள்ள செல்லமுத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம் மற்றும் காவடி வீதியுலா நடைபெற்றது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, குதிரை சேவகனாா் ஆற்றுப்பாலம் அருகிலிருந்து சக்தி கரக புறப்பாடு நடைபெற்றது. பாரம்பரியமான பாதைகளில் வலம்வந்த சக்தி கரக வீதியுலாவின் நிறைவில், தீமிதி திருவிழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் செடில் உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.