நாகப்பட்டினம்

பனை நுங்கு விற்பனை விறுவிறுப்பு

16th May 2022 10:48 PM

ADVERTISEMENT

கோடைகாலத்தையொட்டி பனை நுங்கு விற்பனை, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்படைந்து வருகிறது.

கோடைகாலத்தில் மனித உடலுக்குத் தேவையான நீா்ச் சத்துகளை அளிக்கக் கூடியதாக உள்ளன பனை நுங்குகள். வைட்டமின் பி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் பனை நுங்குகள், கோடைகால வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியைத் தரக் கூடியதாகவும், வியா்க்குரு போன்ற கோடைகால பிரச்னைகளுக்குத் தீா்வு அளிக்கக் கூடியதுமான பனை நுங்குகளின் விற்பனை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

நாகை, வேளாங்கண்ணி, நாகூா் உள்பட நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமாா் 30-க்கும் அதிகமான இடங்களில் தற்போது பனை நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

நாகையை அடுத்த காமேஸ்வரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பனை நுங்குகள் நாகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், 50 ரூபாய்க்கு 12 அல்லது 13 என்ற அளவில் நுங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT