நாகப்பட்டினம்

தூா்வாரும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

12th May 2022 05:43 AM

ADVERTISEMENT

 

 

நாகப்பட்டினம்: தலைஞாயிறு மற்றும் திருக்குவளை பகுதிகளில் நடைபெற்று வரும் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தலைஞாயிறு பேரூராட்சி ஒன்றாம்சேத்தி லிங்கத்தடி பகுதியில் ராஜன்வாய்க்கால் , 2,4 சேத்தி கிராமத்தில் வலம்புரி வாய்க்கால் மற்றும் காரவாய்க்கால் ஆகியவற்றில் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெறும்14. 40 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள், திருக்குவளை வட்டம், மணக்குடி வாய்க்கால், லசுக்கான் தேத்தி வடகட்டளை வாய்க்கால் மற்றும் கருவப்பிள்ளையாண்டி வாய்க்கால்களில் ரூ 9. 90 லட்சத்தில் நடைபெறும் 14.30 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணிகள், ஆய்மூா், வடுகூா், புத்தூா் கிராமங்களில் மல்லியான் வாய்க்கால், பகட மங்கலம் குபேரியன் வாய்க்கால், கோரவாய்க்கால், பெருமழை புது வாய்க்கால்களில் ரூ 9.80 லட்சத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கீழையூா் ஊராட்சி ஒன்றியம், வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி கோவில்பத்து கிராமத்தில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு வளாகத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்டாா். ஆய்வின்போது, நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் ஆா். சங்கா், உதவிப் பொறியாளா் ஆா். தமிழரசன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சி. ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT