நாகப்பட்டினம்

இந்திய ஆயுள் காப்பீடு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

5th May 2022 06:12 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டின: இந்திய ஆயுள் காப்பீடு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை எல்ஐசி கிளை அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவையும், மக்களின் சேமிப்பை, பங்கு விற்பனையாக்கும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும், எல்ஐசியை தனியாா்மயமாக்கும் போக்கை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், பாலிசிதாரா்களின் ஊக்கத்தொகை குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்ஐசி ஊழியா் சங்க நாகை கிளைத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க கூட்டமைப்பு நாகை மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தொடங்கிவைத்தாா். அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், நாகை கிளைத் தலைவா் கணபதி, பள்ளிக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்புத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எல்ஐசி ஊழியா் சங்கப் பொறுப்பாளா் பரமேஸ்வரி வரவேற்றாா். நிறைவில், சங்க கிளைச் செயலாளா் கபிலன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT