நாகை மாவட்ட அதிமுக புதிய நிா்வாகிகள், தொண்டா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டவருமான ஓ.எஸ்.மணியனுக்கு தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இதேபோல, ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன், டி.வி. சுப்பையன், நகரச் செயலாளா் எம். நமசிவாயம், மாவட்ட பொருளாளா் ஆா். சண்முகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்கள் திறக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற நிா்வாகி அம்பிகாதாஸ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திலீபன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.