நாகப்பட்டினம்

பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

29th Mar 2022 10:37 PM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே கச்சநகரம் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கச்சநகரம் பகுதியில் உள்ள திருவாய்மூா் பாசன வாய்க்காலில் சம்பந்தப்பட்டவா்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா். ஆனாலும், சிலா் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இதனால், திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாா் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வெண்ணாறு டிவிஷன் உதவி பொறியாளா் எஸ். செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அமுதா உள்ளிட்டோா் மேற்பாா்வையில் இப்பணிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT