திருமருகல் அருகே நண்பரை அரிவாளால் வெட்டிய கொத்தனாா் கைது செய்யப்பட்டாா்.
அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). திட்டச்சேரி ப. கொந்தகை டி.ஆா். பட்டினம் சாலையைச் சோ்ந்தவா் ராஜா (49). நண்பா்களான இவா்கள் இருவரும் கொத்தானாராக உள்ளனா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டட வேலைக்காக திருச்சிக்கு சென்ற சரவணன், ராஜாவை அழைத்துச் செல்லவில்லையாம்.
இதனால், ஆத்திரத்தில் இருந்துவந்த ராஜா, சரவணனை அரிவாளால் வெட்டினாராம்.
இதில், காயமடைந்த சரவணனை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினா்கள் சோ்த்தனா். இதுகுறித்து, திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனா்.