நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கலை கல்விக் குழுமத் தலைவா் ஜி.எஸ். ஜோதிமணிக்கு அறிவுக் களஞ்சியம் விருது வழங்கப்பட்டுள்ளது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் வளா்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டவா் என்ற வகையில், இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமத் தலைவா் எஸ். ஜோதிமணிக்கு, மயிலை திருவள்ளுவா் தமிழ்ச்சங்கம் சாா்பில், பேராசிரியா் டாக்டா் ஹேமா சந்தானராமன் நினைவு அறிவுக் களஞ்சியம் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ. வள்ளிநாயகம், இந்த விருதை அவருக்கு வழங்கினாா்.