நாகப்பட்டினம்

பெண்களுக்கு ஆடுகள் வளா்ப்பு பயிற்சி

25th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பெண்களுக்கு ஆடுகள் வளா்ப்பு பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

ஊரக ஏழை விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற ஏழைப் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வளா்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிக்கு நாகை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஹசன் இப்ரஹிம் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா் முத்துக்குமரன் வரவேற்றாா். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மைய பேராசிரியா் சுரேஷ் பயிற்சியளித்தாா். இதில், 80-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT